மாநில செய்திகள்

சென்னைக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை + "||" + 80 metric tons of oxygen arrives in Chennai by Oxygen Express train

சென்னைக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை

சென்னைக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக சென்னை தண்டையார்பேட்டையில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.
சென்னை,

கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

இதில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 115 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்திருப்பதாகவும், இதில் 444 டேங்கர்களில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. இதுவரை 7,115 டன் மருத்துவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பதாக ரெயில்வே குறிப்பிட்டு உள்ளது.

அந்த வகையில் மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை வந்து சேர்ந்த முதல் ஆக்சிஜன் ரெயிலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னை வந்து சேர்ந்துள்ளதாகவும், இது மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்
சென்னையில் நீர்நிலை, வடிகால் புனரமைப்பு பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2. சென்னையில் இதுவரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் இதுவரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார்.
3. சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்படும் என்று ரெயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்துள்ளது.
5. சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னையில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.