மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக அரசு, மாநகராட்சி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் + "||" + Instruction to keep Government and Corporation schools ready for corona treatment

கொரோனா சிகிச்சைக்காக அரசு, மாநகராட்சி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கொரோனா சிகிச்சைக்காக அரசு, மாநகராட்சி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு தயார் நிலையில் வைத்திருக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டன. பல இடங்களில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வேன்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை  மற்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிக வகுப்பறைகள் மற்றும் இடவசதிகள் உள்ளதால், அவற்றை கொரோனா சிகிச்சை பயன்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60 மாநகராட்சி பள்ளிகளில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2. பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு
பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
3. தொழிற்சாலை ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
தொழிற்சாலை ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும், பணியிடங்களில் ஊழியர்கள் முக கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் தரப்பில் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
4. திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு.
5. கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு- அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
கொரோனா வைரசுக்கு சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது எலிகளிடம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டு உள்ளது.