தேசிய செய்திகள்

ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை + "||" + Medical equipments from Germany, Netherlands and Portugal arrive in India

ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இன்று ஜெர்மனியில் இருந்து 25,000 ரெம்டெசிவிர் மருந்துகள், 223 வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன. மேலும் அதே விமானத்தில் நெதர்லாந்து நாட்டில் இருந்து 30,000 ரெம்டெசிவிர் மருந்துகளும், போர்ச்சுகல் நாட்டில் இருந்து 5,500 ரெம்டெசிவிர் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஆக்கி போட்டி: நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வி
ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வியடைந்தது.
2. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168-ஐ கடந்துள்ளது.
3. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு
ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.
4. ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்
ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
5. ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்
ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் பட்டம் வென்றார்.