உலக செய்திகள்

ஆஸ்திரேலியா விதித்த பயண தடை முடிவு; இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றது + "||" + Travel ban imposed by Australia ended; India's first flight went to Australia

ஆஸ்திரேலியா விதித்த பயண தடை முடிவு; இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றது

ஆஸ்திரேலியா விதித்த பயண தடை முடிவு; இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றது
இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
மெல்போர்ன்,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்  பரவத் தொடங்கிய போது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பயண தடை நன்றாக வேலை செய்ததாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.

இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது. இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர்.

எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார். இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது.

இந்த விமானம் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
2. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 4-1 என்ற கணக்கில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
5. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.