தேசிய செய்திகள்

சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு - மத்திய அரசு நடவடிக்கை + "||" + Bengal BJP Leader Suvendu Adhikari's Father, Brother Get Y+ Security

சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு - மத்திய அரசு நடவடிக்கை

சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு - மத்திய அரசு நடவடிக்கை
திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி, 

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த முறை மந்திரியாக இருந்த சுவேந்து அதிகாரி, சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். 

அவரது தந்தை சிசிர் குமார் அதிகாரி, சகோதரர் திப்யேந்து அதிகாரி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். இதில் சசிர் குமாரும் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்திருந்தார்.

இந்த நிலையில் சிசிர் குமார் மற்றும் திப்யேந்து ஆகியோருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்டறிந்து உள்ளன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 

அதன்படி இருவருக்கும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்படும். மாநிலத்தில் இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சி.ஆர்.பி.எப்.ஐ சேர்ந்த 4 அல்லது 5 கமாண்டோ வீரர்கள் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். முன்னதாக சுவேந்து அதிகாரிக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு அம்மாநில சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
2. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை
பிரபல டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
3. மேற்குவங்காளம்: பாதுகாவலவர் தற்கொலை வழக்கில் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு
நந்திகிராம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. சுவேந்து அதிகாரியை சந்திக்கவில்லை: துஷார் மேத்தா மறுப்பு
மே.வங்க பாஜக தலைவரான சுவேந்து அதிகாரியை, தான் சந்திக்கவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
5. சுவேந்து அதிகாரியை சந்தித்த சொலிசிட்டர் ஜெனரலை பதவி நீக்க வேண்டும்; பிரதமருக்கு திரிணாமுல் எம்.பி.க்கள் கடிதம்
மேற்கு வங்காள எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரி, டெல்லியில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை சந்தித்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.