உலக செய்திகள்

இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி + "||" + India Deploys Multiple Assets To Help Sri Lankan Navy Douse Flames On MV X-Press Pearl

இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி

இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி
இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியாக இந்தியா 3 கப்பல்களை அனுப்பி உள்ளது.
கொழும்பு, 

குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து அழகு சாதனப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை (ரசாயனங்கள்) ஏற்றிக்கொண்டு ‘எக்ஸ்பிரஸ் பியர்ல்’ என்ற சரக்கு கப்பல் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. 

இதில் இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா, ரஷிய சிப்பந்திகள் 25 பேர் இருந்தனர். இந்த கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென தீப்பிடித்தது. அந்தக் கப்பல், 20-ந்தேதி கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டு, தீயணைப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

மோசமான வானிலையால் தீ கட்டுக்குள் வரவில்லை. ஆனாலும் சிப்பந்திகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். அந்தக் கப்பலின் தீயை அணைப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது. இதன்படி கப்பலில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் பணியில் இந்திய கடலோரக்காவல் படையின் வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரபிரஹரி ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பியது. இதைக் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
2. சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி
சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி.
3. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
4. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.
5. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆடுகிறது.