மாநில செய்திகள்

பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு + "||" + Government of Tamil Nadu appeals to High Court to lift ban on pulses procurement

பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
பருப்பு கொள்முதல் டெண்டருக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கான டெண்டரில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். டெண்டர் அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த இக்கட்டான சூழலில் மக்களின் தேவைக்காக அவசர கால டெண்டர் விடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, மணிகண்டன் தொடர்ந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் பருப்பு, பாமாயில் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த மேல்முறையீட்டை மதுரை நீதிமன்றத்தில்தான் தொடரவேண்டும் என்றிருந்தாலும், தடைவிதித்த நீதிபதி தலைமையிலேயே இரு நீதிபதி அமர்வு இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வில் தமிழக அரசு அவசர மேல்முறையீடு செய்துள்ளது.

அதில், இந்த டெண்டருக்கு தடை விதிக்கப்பட்டால் அரசு பருப்பு, பாமாயில் வழங்குவதில் குளறுபடி ஏற்படுவதுடன், பற்றாக்குறையும், தேக்கமும் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் டெண்டர் விடப்பட்டதாகவும், எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் மேல் முறையீடு மனுவை சென்னையிலேயே தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மதியம் அல்லது நாளை காலை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பக்ரீத் கொண்டாட்டத்தில் 50 பேருக்கு மேல் கூட தடை: உத்தரபிரதேச அரசு அறிவிப்பு
குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது
2. இந்தியாவுக்கான விமான போக்குவரத்து: ஜூலை 11ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு
இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது.
3. வழக்கு நிலுவையில் உள்ள போது, இதே கோரிக்கையுடன் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு லைகா மீது ஷங்கர் புகார்
இந்தியன் 2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க தடைகோரி லைகா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் புகார் தெரிவித்துள்ளார்.
4. ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தன
ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயில் உதவியுடன் 26.6 டன் ஆக்சிஜனை நிரப்பி கொண்டு 2 லாரிகள் திருவள்ளூர் வந்தடைந்தது.
5. கோவாவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிப்பு
கொரோனா பரவல் காரணமாக கோவாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.