தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு + "||" + Uttar Pradesh Essential Services Maintenance Act extended by another 6 months

உத்தரபிரதேசத்தில் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

உத்தரபிரதேசத்தில் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து உத்தரபிரதேச அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
லக்னோ,

வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக கருதும் ‘அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை’ (எஸ்மா) உத்தரபிரதேச அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தியது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த இச்சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது. இந்த நிலையில், இதை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மாநகராட்சிகள், உள்ளாட்சிகள் உள்பட அனைத்து அரசுத்துறைகளிலும் வேலை நிறுத்தத்துக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. வேலைநிறுத்தத்தை தூண்டி விடுபவருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையோ, ரூ.1,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். சட்ட விதிகளை மீறுபவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் வீட்டு முன் விளையாடிய சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை
உத்தரபிரதேச மாநிலம் பாராய்ச் மாவட்டத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனப்பகுதியை ஒட்டி கலந்தர்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, அன்ஷிகா என்ற 6 வயது சிறுமி தனது மாமாவுடன் தன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.
2. உத்தரபிரதேசத்தில் மாடி பஸ் மீது லாரி மோதியதில் 18 பயணிகள் பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து பீகார் மாநிலம் நோக்கி 130 பயணிகளுடன் ஒரு தனியார் மாடி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், நேற்று முன்தினம் இரவு, உத்தரபிரதேச மாநிலம் பாரபரங்கியில் லக்னோ-அயோத்தி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பஸ்சின் அச்சு முறிந்தது.
3. உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-லாரி மோதல்; பக்தர்கள் 4 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் சீத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாகுலபாரா கிராமத்தைச் சேர்ந்த சிலர், பாரபங்கியில் அமைந்திருக்கும் மாஜிதா நாக தேவதா கோவிலுக்கு டிராக்டர் டிரெய்லரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
4. உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று நாசவேலை நடத்த சதி: அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் 2 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று நாசவேலை நடத்த சதி செய்த அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் 2 பேர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
5. உத்தரபிரதேசத்தில் மணமகனின் வீட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்த மணப்பெண்
உத்தரபிரதேசத்தின் பதான் நகர பா.ஜனதா துணைத்தலைவராக இருப்பவர் வேத்ராம் லோதி. இவரது மகள் சுனிதாவுக்கும், பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடந்தது.