உலக செய்திகள்

மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி + "||" + Permission for emergency use of the Johnson & Johnson vaccine in Mexico

மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி
மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ சிட்டி,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மெக்சிகோவில் 6 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் 4 நிறுவனங்களின் தடுப்பூசிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஆய்வக முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், அதனை அவசரகால பயன்பாட்டிற்கு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என மெக்சிகோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே மெக்சிகோவில் பைசர், கோவேக்சின், அஸ்ட்ரா செனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி செலுத்த துவங்கியதன் பின்னர், அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் இனி குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு
மெக்சிகோவில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம் ஒரு நபர் 5 கிராமுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி கிடையாது.
2. மெக்சிகோவில் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்; கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி
மெக்சிகோவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தினர்.
3. மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி 200-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
4. மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா முடிவு
மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நியூவோ லியோன் மாகாணத்தின் தலைநகர் மான்டேரியில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.