தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன - மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி கேள்வி + "||" + Delhi Dy CM slams Centre for vaccine ‘mismanagement’, questions how private hospitals are getting doses

தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன - மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி கேள்வி

தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன - மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி கேள்வி
மாநிலங்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கூறப்படும் போது தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன என்று மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 முதல் 44 வயதிற்கு உள்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மாநிலங்களுக்கு தடுப்பூசி இல்லை என்று கூறப்படும் போது தனியார் மருத்துவமனைகள் மட்டும் எப்படி தடுப்பூசி பெறுகின்றன என்று மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, சிசோடியா நேற்று கூறியதாவது,

டெல்லியில் இதுவரை 1.84 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 92 லட்சம் பேர் 18 முதல் 44 வயதிற்கு உற்பட்டவர்கள். 

தற்போது, கொரோனா தடுப்பூசி இல்லாததால் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி உள்ளதால் அடுத்த மாதம் 5.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசிகளும் ஜூன் 10-ம் தேதிக்கு பின்னர் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகளுக்கும், தனியாருக்கும் இதுவரை கொடுத்த தகவல்களை மத்திய அரசு பொதுவெளியில் பகிர வேண்டும். தடுப்பூசி இல்லை என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவிக்கும் போது தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எவ்வாறு கொரோனா தடுப்பூசி கிடைக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு சரியான திட்டமிடல் இல்லை’ என டெல்லி முதல்மந்திரி சினோடியா குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியானாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
அரியானாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 933 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 933 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் இன்று 8 ஆயிரம் பேருக்கு கொரோனா - 10 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
மராட்டியத்தில் இன்று 8 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 11 ஆயிரம் பேருக்கு கொரோனா - 90 பேர் பலி
கேரளாவில் இன்று 11 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று 9 ஆயிரம் பேருக்கு கொரோனா - 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
மராட்டியத்தில் இன்று 9 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.