தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல் + "||" + Union Minister Jitendra Singh instructs govt employees to get vaccinated as soon as possible

அரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்

அரசு ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்
18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் அமைச்சகத்தின் இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தடுப்பூசி திட்டத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால் பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை (டிஓபிடி) 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும் விரைவாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்துகிறது’’ என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை
அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3. பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்
பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4. ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தடை அரசு உத்தரவு
ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
5. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போட்டனர்
கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்களை போட்டனர்.