உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமருக்கும், அவரது காதலிக்கும் இடையே நடந்து முடிந்த ரகசிய திருமணம் + "||" + Boris Johnson marries fiancee in secret ceremony - reports

இங்கிலாந்து பிரதமருக்கும், அவரது காதலிக்கும் இடையே நடந்து முடிந்த ரகசிய திருமணம்

இங்கிலாந்து பிரதமருக்கும், அவரது காதலிக்கும் இடையே நடந்து முடிந்த ரகசிய திருமணம்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸ் இடையே இன்று ரகசியத்திருமணம் நடைபெற்றது.
லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வருபவர் போரிஸ் ஜான்சன்(56). இவர் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ் (33) உடன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். 

இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதனை தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜான்சன் - ஹேரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது காதலி ஹேரி சைமண்ட்ஸ் இடையே இன்று ரகசியத்திருமணம் நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது. 

லண்டனில் உள்ள ஒரு கிருஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் மிக சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. ஜான்சனுக்கு இது 3-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. காதலி ஹேரி சைமண்ட்ஸை திருமணம் செய்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக கருதவில்லை: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
உகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற கூற்றை தான் நம்பவில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
2. “இந்தியாவுக்கு உதவ தயார்” இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
கொரோனா பெருந்தொற்றால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
3. அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்
போரிஸ் ஜான்சன் அடுத்த மாத (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார்.
4. இங்கிலாந்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு: போரிஸ் ஜான்சன் வேதனை
ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தில் தான் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
5. புதிய வகை கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர்.