உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 17 கோடியாக உயர்வு + "||" + World Wide Coronavirus Update as on Today

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 17 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 17 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 17 கோடியே அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 17 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரத்து 101 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரத்து 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 15 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 125 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 35 லட்சத்து 47 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்,

அமெரிக்கா - 3,40,34,596
இந்தியா - 2,77,29,247
பிரேசில் - 1,64,71,600
பிரான்ஸ் - 56,57,572
துருக்கி - 52,35,978

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா தொற்று
தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா பாதிப்பு: உத்தரகாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து
கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்டில் பிளஸ் 2 தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
3. இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.
4. இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவானது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவாகியுள்ளது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
5. இந்தியாவில் புதிய உச்சமாக ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவு
பீகார் மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறுகணக்கீட்டின் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.