மாநில செய்திகள்

கொரோனா தொற்று; போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. தகவல் + "||" + Corona infection; Postponement of Traffic Vehicle Analyst Interview - TNPSC Information

கொரோனா தொற்று; போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. தகவல்

கொரோனா தொற்று; போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து வாகன ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-2 பணிக்கான நேர்முகத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது.

அதேபோல், ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில் அடங்கிய, உதவி மின் ஆய்வாளர், உதவி என்ஜினீயர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற இருந்த துறை தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது. அதன்படி இந்த தேர்வானது ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. இந்தியாவில் நேற்று 19.02 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 19.02- லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
3. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
4. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
5. அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை