உலக செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 10 பயணிகள் பலி + "||" + Bus plunges into river in PoK; 10 passengers killed

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 10 பயணிகள் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 10 பயணிகள் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகாலையில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் 10 பயணிகள் பலியாகி உள்ளனர்.
முசாபராபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத்தில் இருந்து கோஹலா நோக்கி செல்லும் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  ராவல்பிண்டி சென்று விட்டு அங்கிருந்து சகோத்தி நகர் நோக்கி பேருந்து புறப்பட்டது.

இந்த நிலையில், முசாபராபாத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் ஜமீனாபாத் கிராமம் அருகே வந்தபொழுது, அதிகாலை 2.30 மணியளவில் ஜீலம் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.  பேருந்தில் 25 பேர் பயணம் செய்துள்ளனர்.  அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகேயிருந்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் போலீசாருக்கு விபத்து பற்றி தெரிவித்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்தன.  இந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

ஆற்று நீரால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது.  இந்த காரணத்தால் விபத்து நடந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  எனினும், பேருந்தின் ஓட்டுனர் கண் அயர்ந்து, அவரது கட்டுப்பாட்டை மீறி சென்று விபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.