மாநில செய்திகள்

தருமபுரியில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவக்குழு + "||" + A medical team went to the home of a disabled person in Dharmapuri and vaccinated him

தருமபுரியில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவக்குழு

தருமபுரியில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவக்குழு
தருமபுரியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் அழைப்பை ஏற்று மருத்துவக்குழு அவரது வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தியுள்ளது.
தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூரில் பாட்ஷாபேட்டையை சேர்ந்தவர் மதிவாணன்.  ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவர், மாற்றுத்திறனாளியாக உள்ளார்.  இதனால், அவரால் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு நேரடியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டது.  இதனையடுத்து, தடுப்பூசி முகாம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது நிலையை எடுத்து கூறியுள்ளார்.

இந்நிலையில், மதிவாணனின் அழைப்பை ஏற்ற அரூர் வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் தலைமையிலான குழுவினர், அவரது வீட்டிற்கே சென்று உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு தடுப்பூசி செலுத்தினர்.

இதன்பின்னர், தனது அழைப்பை ஏற்று வீட்டிற்கே வந்து தடுப்பூசி செலுத்தி, ஒத்துழைப்பு வழங்கியதற்காக மருத்துவ குழுவினருக்கு மதிவாணன் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.