மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லையில் பெண் ஒருவர் உயிரிழப்பு + "||" + A woman dies in Nellai due to black fungal disease

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லையில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லையில் பெண் ஒருவர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லை,

மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு வயது 40 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அனைத்து தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள பொதுமக்கள், நிலைமையை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2. மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பலி
மதுரையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. நெல்லையில் 2 கொரோனா சிகிச்சை மையங்கள் - காணொலி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லையில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4. அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்
அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.
5. ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும்; மராட்டிய மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
ஜூன் 1-ந் தேதி முதல் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 60 ஆயிரம் மருந்து கிடைக்கும் என மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.