தேசிய செய்திகள்

மன் கி பாத் நிகழ்ச்சி: டவ்-தே, யாஸ் புயல்களை எதிர்கொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் + "||" + Mann Ki Baat show: PM Modi praises the people who faced the Dowktae, Yas storms

மன் கி பாத் நிகழ்ச்சி: டவ்-தே, யாஸ் புயல்களை எதிர்கொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்

மன் கி பாத் நிகழ்ச்சி:  டவ்-தே, யாஸ் புயல்களை எதிர்கொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி புகழாரம்
நாட்டில் கடந்த 10 நாட்களில் டவ்-தே, யாஸ் ஆகிய இரு புயல்களை தைரியமுடன் எதிர்கொண்ட மக்களுக்கு பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.  2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  இதில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 நாட்களில் டவ்-தே, யாஸ் ஆகிய இரு புயல்களை தைரியமுடன் எதிர்கொண்ட மக்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் 77வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கொரோனா பாதிப்புக்கு எதிரான போரில் நம்முடைய நாடு எப்படி முழு பலத்துடன் போராடி வருகிறது என நாம் கண்டு வருகிறோம்.

அதேவேளையில், ஒரு சில பேரிடர்களும் சூழ்ந்த நிலையை நாடு கவனத்தில் கொண்டது.  கடந்த 10 நாட்களில் இரு மிக பெரிய சூறாவளி புயல்களை நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகள் எதிர்கொண்டன.

மேற்கு கடலோரத்தில் டவ்-தே புயலும், கிழக்கு கடலோரத்தில் யாஸ் புயலும் தாக்கின.  நாட்டு மக்களும், நாடும் இந்த சூறாவளி புயலை தைரியமுடன் எதிர்கொண்டன.

இந்த பேரிடரின்போது, புயல் பாதித்த மாநில மக்கள் தைரியமுடன் போராடி, பொறுமையும், கண்ணியமும் காத்தனர்.  அவர்களுடைய முயற்சிகளை பணிவுடன் வணங்குகிறேன்.  புயல் காலங்களில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மக்களை நான் வணங்குகிறேன்.

புயலால் அன்பிற்குரியவர்களை இழந்த மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  நாம் அனைவரும் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என பேசியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயன் கையொப்பத்தால்’’ கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து புகழாரம்
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், இன்று தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயனின் கையொப்பத்தால்’’, என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
2. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை: பிரதமர் மோடி புகழாரம்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்து உள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
3. பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
4. கொரோனா காலத்தில் சிறந்த பங்காற்றியவர்கள் அன்னையர்; மத்திய மந்திரி புகழாரம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறந்த பங்காற்றியவர்கள் அன்னையர் என மத்திய மந்திரி நிஷாங்க் பொக்ரியால் கூறியுள்ளார்.
5. தி.மு.க.வை கட்டுப்பாடோடு வழிநடத்துகின்ற வல்லமை மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது துரைமுருகன் புகழாரம்
தி.மு.க.வை கட்டுப்பாடோடு வழிநடத்துகின்ற வல்லமை மு.க. ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.