மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு + "||" + District Collector Kathiravan has ordered to seal 225 village panchayats in Erode district to prevent outsiders from entering

ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு,

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றும் புதிதாக 1,743 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 144 ஆக உயர்ந்தது. இதில் 38 ஆயிரத்து 426 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,301 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 14 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறும் ஆஸ்பத்திரிகள்
ஈரோட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஆஸ்பத்திரிகளே திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர்கள் 2 பேரும் வெற்றி
ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர்கள் 2 பேரும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.
3. ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் - பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
4. ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை