மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு + "||" + One person dies in Dindigul district due to black fungus

கருப்பு பூஞ்சை பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
கருப்பு பூஞ்சை பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டம் கருப்பணம்பட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல்,

மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கருப்பணம்பட்டியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் கருப்பு பூஞ்சை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது ஜார்க்கண்ட் அரசு
நாடு முழுவதும் இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று
3. புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைநோய்க்கு மேலும் ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் இறந்தார்.
4. கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன
கருப்பு பூஞ்சை நோய்க்கு மாற்று சிகிச்சையை கண்டறிய 13 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
5. தமிழகத்தில் 921 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை