மாநில செய்திகள்

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு + "||" + COVID-19: Tamil Nadu CM MK Stalin inspects health facilities at Erode, Tirupur and Coimbatore

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
பிபிஇ -கிட் அணிந்து கொரோனா வார்டில் நோயாளிகளிடம் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை,

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை உச்சம் பெற்றுள்ளது.  இதனால் கோவையில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளுக்கு பின்னர், கோவைக்கு ஸ்டாலின் கார் மூலம் வருகை தந்தார். பின்னர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  

இதையடுத்து பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். முதல்- அமைச்சர் ஸ்டாலின்  இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்டாலும் அவதிப்படும் நோயாளிகள்; விஞ்ஞானிகளின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனாவில் இருந்து குணமடைந்து 6 மாதங்களுக்கு பின்னரும் பல்வேறு பின்விளைவுகளால் நோயாளிகள் அவதிப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.