தேசிய செய்திகள்

கேரளாவில் பருவ மழை 2 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் + "||" + Arrival of #monsoon over Kerala likely to be delayed by 2 days & now expected to make an onset over the state by June 3: IMD

கேரளாவில் பருவ மழை 2 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளாவில் பருவ மழை 2 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் பருவமழை ஜுன் 3 ஆம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு பெய்யும்.

நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது மே 31 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில்,  கேரளாவில் பருவமழை துவங்க 2 நாட்கள் தாமதம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கணித்துள்ளது. ஜுன் 3 ஆம் தேதி கேரளாவில் பருவமழை துவங்கக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. நடப்பு ஆண்டில் பருவமழை இயல்பான அளவு இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
நடப்பு ஆண்டில் பருவமழை இயல்பு நிலையில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.