தேசிய செய்திகள்

உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆற்றில் வீசிச் சென்ற உறவினர்கள் - வீடியோ + "||" + A man in a PPE suit was caught on camera throwing a body into Rapti river in UttarPradesh

உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆற்றில் வீசிச் சென்ற உறவினர்கள் - வீடியோ

உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆற்றில் வீசிச் சென்ற உறவினர்கள் - வீடியோ
உத்தரப்பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை உறவினர்கள் ஆற்றில் வீசி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில்  பல்ராம்பூர் மாவட்டத்தில் பிபிஇ உடை அணிந்த ஒருவர் உள்பட இரண்டு நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி வீசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலத்தின் வழியே வாகனத்தில் சென்றவர்களால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகத் தொடங்கியதையடுத்து, காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி பல்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பகதூர் சிங்  தெரிவித்தது:

"ஆற்றில் தூக்கி வீசப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் நாத் மிஸ்ரா. அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மே 25-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 28-ம் தேதி உயிரிழந்தார்.

கொரோனா வழிமுறைகளுக்குள்பட்டு அவரது உடல் குடும்ப உறுப்பினர்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றார்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், அவரது உடல் ரப்தி நதியில் வீசப்படுவதைப் பார்க்கலாம். இதுதொடர்பாக கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.