தேசிய செய்திகள்

டெல்லியில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது + "||" + Delhi Reports Under 1,000 Covid Cases Again, Deaths Below 100

டெல்லியில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

டெல்லியில்  2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
டெல்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. ஏறத்தாழ 28 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். 

இதன் பலனாக தொற்று பரவல் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது.  இந்த நிலையில், டெல்லியில் நேற்று 956-பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 946- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உள்ளது. சனிக்கிழமை 122- பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்து இருந்த நிலையில் இன்று  உயிரிழப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.  தொற்று பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 1.5 சதவிகிதமாக உள்ளது. 

டெல்லியில்  ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.  கொரோனா தொற்று குறைந்தாலும், ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு டெல்லியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழில் நடவடிக்கைகளுக்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மேலும் 2,760 பேர் பலி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 88,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.73- கோடியாக உயர்ந்துள்ளது.
3. கொரோனா பிரச்சினைக்கு ஊரடங்கு என்பது இறுதி தீர்வல்ல-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
4. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.
5. தினசரி கொரோனா பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தோடு ஒப்பிடும் போது தற்போது 85 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.