தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா + "||" + 19,894 new COVID-19 cases in Kerala on Sunday; TPR drops to 15.97%

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில்  19,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

தொற்று பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 15.97- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய ஒரே நாளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 537- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் 2 லட்சத்து 23 ஆயிரமாக சரிந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,013- பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 186- பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை உயிரிழந்தவர்கள் ஏண்ணிக்கை 8,641- ஆக  உயர்ந்துள்ளது.  மாநிலத்திலேயே அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 3,015-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் 2,423-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா அடுத்த அலை எப்போது? உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
2. டெல்லியில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
டெல்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.
3. ‘உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்’; ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.
4. கேரளாவில் புதிதாக இன்று 23,513 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஜூன் 9ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது.