தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஜுன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு + "||" + Karnataka COVID-19 Lockdown To Continue Till June 7, Says Minister

கர்நாடகாவில் ஜுன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

கர்நாடகாவில் ஜுன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,378- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.  தினசரி பாதிப்பு சுமார் 50 ஆயிரம் வரை சென்றது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. 

இதன்பலனாக கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.  அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 20,378-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியிருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? என்ற கேள்விகளும் அம்மாநில மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற பொதுவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசிடம் இருந்து  வந்துள்ளது. எனவே, தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் வரும் 7 ஆம் தேதி வரை எந்த மாற்றமும் இருக்காது.  அடுத்த சில தினங்களில்  நிபுணர்கள் மற்றும் மந்திரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு முதல் மந்திரி எடியூரப்பா, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 7,810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு; 3,403 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு அடைந்துள்ளது. 3,403 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
4. இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,125- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் இன்று புதிதாக 11,766- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.