மாநில செய்திகள்

பரவல் வேகம் குறைகிறது: தமிழகத்தில் ஒரே நாளில் 28,864 பேருக்கு கொரோனா; 493 பேர் உயிரிழப்பு + "||" + Tamil Nadu records 28,864 new COVID19 cases

பரவல் வேகம் குறைகிறது: தமிழகத்தில் ஒரே நாளில் 28,864 பேருக்கு கொரோனா; 493 பேர் உயிரிழப்பு

பரவல் வேகம் குறைகிறது:  தமிழகத்தில் ஒரே நாளில் 28,864 பேருக்கு கொரோனா; 493 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் குறைகிறது. இன்று ஒரே நாளில் 28,864 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 493 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் வேகம் குறைந்து கொண்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,73,351 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 28,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 2,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் தொடர்ந்து 18-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

12 வயதிற்குட்பட்ட 1,040 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 93 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 129 பேர் உயிரிழந்தனர்.  அரசு மருத்துவமனைகளில் 294 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் உயிரிழந்தனர். 

கொரோனாவால் ஒரே நாளில் 493 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,754 ஆக உயந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து மேலும் 32,982 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 17,39,280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,05,546 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.