தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது + "||" + Maharashtra records 18,600 new Covid-19 cases, lowest in over 2 months

மராட்டியத்தில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது

மராட்டியத்தில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது
மராட்டியத்தில் தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30-ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.
மும்பை,

கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மராட்டியம், கொரோனாவின் கோரப்படியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக  கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இறங்கு முகம் கண்டு வருவது அம்மாநில மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 

மராட்டிய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, மராட்டியத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,600- ஆக குறைந்துள்ளது.  கடந்த 2 மாதங்களில்  பதிவான  குறைந்த பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கடந்த மார்ச் 16 ஆம் தேதி மராட்டியத்தில் 17,864- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் 20 ஆயிரத்திற்கு கீழ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

எனினும், கவலை அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் மேலும் 402- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 844- ஆக குறைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் ஜுன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,378- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலையை நாம் கணிக்க முடியாது-உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
4. டெல்லியில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
டெல்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.
5. ‘உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்’; ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா.