தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் ஜூன் 9 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு + "||" + COVID19 Telangana government extends the lockdown for 10 more days in the State

தெலுங்கானாவில் ஜூன் 9 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு

தெலுங்கானாவில் ஜூன் 9 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு
தெலுங்கானாவில் ஜூன் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஏற்கெனவே அமலில் இருக்கும் முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முழு ஊரடங்கை நாளை முதல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"குடிமக்கள் வீடு திரும்ப பிற்பகல் 1 மணி வரை முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பிற்பகல் 1 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.