தேசிய செய்திகள்

ஜூலை மாத இறுதிக்குள் 20-25 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு + "||" + Government of India targets to procure 20-25 crore vaccine doses by July end, and 30 crore doses in August-September

ஜூலை மாத இறுதிக்குள் 20-25 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு

ஜூலை மாத இறுதிக்குள் 20-25 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு
அடுத்த மாதம் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய அரசுக்குக்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் அமைச்சகத்தின் இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.

 தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தில் வரும் ஜூன் மாதம் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், சீரம் நிறுவனத்திடம் இருந்து ஜூலை மாத இறுதிக்குள் 20-25 கோடி கொரோனா தடுப்பூசிகளையும், செப்டம்பருக்குள் 30 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அடுத்த மாதம் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.