தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனையா? பயந்து வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்ட கிராம மக்கள்! + "||" + Tribals In Uttarakhand Village Flee Into Forest To Escape Covid Testing

கொரோனா பரிசோதனையா? பயந்து வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்ட கிராம மக்கள்!

கொரோனா பரிசோதனையா? பயந்து வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்ட கிராம மக்கள்!
உத்தரகாண்டில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமே வனப்பகுதிக்குள் ஒளிந்த கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பித்தோராகர்,

உத்தரகாண்டில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒரு கிராமமே கூண்டோடு தப்பித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஒளிந்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பித்தோராகார் பகுதியில், அலுத்தாரி மற்றும் ஜாம்தாரி என்ற கிராமங்களில் சுகாதாரத்த்துறை அதிகாரிகள் தொற்று பரிசோதனை மேற்கொண்ட தகவல் அருகே இருந்த குட்டா சதுரானி என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள பெரும்பாலானோர் பரிசோதனைக்கு பயந்து அருகில் இருந்த வனப்பகுதிக்கு தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பரிசோதனை மேற்கொண்டால் தான் தாங்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாவோம் என அந்த பழங்குடியினர் பயப்படுவதே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளதால், அந்த சமூகத்தில் ஓரளவு படித்தவர்கள் மூலம் பழங்குடியின மக்களுக்கு கொரோனா பரிசோதனை குறித்து எடுத்துக்கூற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் டிமிக்கு கொடுத்து வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.