தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்: ‘வீட்டுக்கு அனுப்பாதீங்க’ உத்தரபிரதேச சிறை கைதிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் + "||" + In Uttar Pradesh, some feel it’s ‘safer and healthier’ in jail

கொரோனா அச்சம்: ‘வீட்டுக்கு அனுப்பாதீங்க’ உத்தரபிரதேச சிறை கைதிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள்

கொரோனா அச்சம்: ‘வீட்டுக்கு அனுப்பாதீங்க’ உத்தரபிரதேச சிறை கைதிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள்
‘நாங்கள் சிறையில் தற்போது பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறோம்.
லக்னோ, 

தற்போதைய கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும்விதமாக கைதிகளுக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன்படி பல்வேறு மாநில சிறை நிர்வாகங்கள் கைதிகளை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன. உத்தரபிரதேச மாநில சிறைத்துறையும் ஜாமீனில் அனுப்புவதற்கு கைதிகளின் பட்டியலை தயாரித்தது. ஆனால் அந்த மாநிலத்தின் 9 சிறைகளைச் சேர்ந்த 21 கைதிகள், வெளியே செல்ல மறுத்துவிட்டனர். சிலர், தாங்கள் தற்போது பரோல் விடுப்பாக பெறும் 90 நாட்களை பிற்பாடு சிறையில் கழிக்க வேண்டும் என்பதற்காக வீடு செல்ல மறுத்துள்ளனர். ஆனால் பலர் கூறிய காரணம், ‘கொரோனா’.

‘நாங்கள் சிறையில் தற்போது பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறோம். அவ்வப்போது பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் வெளியே கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நாங்கள் பரோலில் சென்று அந்த அபாயத்துக்கு உள்ளாக வேண்டுமா?’ என்று அவர்கள் கேட்கின்றனர்.

‘சிறையில் மணியடித்தால் சாப்பாடு கிடைத்துவிடுகிறது. ஆனால் வெளியே சென்று ஏன் அதற்கு கஷ்டப்பட வேண்டும்?’ என்பது சிலரின் கேள்வி. இதைத்தொடர்ந்து சிறை அதிகாரிகளும் கைதிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.