மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல் + "||" + Employment Office Registration: Those who fail to renew can also apply online - Government of Tamil Nadu Information

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு: புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ.வீரராகவராவ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்துள்ளவாறு இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28-ந்தேதி முதல் 3 மாதங்களுக்குள் அதாவது, வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.

அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையதளம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி வரை பதிவுதாரர்கள் தங்களுடைய பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என்று அதில் அவர் கூறியுள்ளார்.