மாநில செய்திகள்

வருமானவரித்துறைக்கு வரும் 7-ந்தேதி முதல் புதிய இணையதளம் அறிமுகம் + "||" + Introducing the new website from the 7th coming to the Income Tax Department

வருமானவரித்துறைக்கு வரும் 7-ந்தேதி முதல் புதிய இணையதளம் அறிமுகம்

வருமானவரித்துறைக்கு வரும் 7-ந்தேதி முதல் புதிய இணையதளம் அறிமுகம்
வருமானவரித்துறை இணையதளம் நாளை முதல் 6-ந் தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, 

வருமானவரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை வரும் 7-ந் தேதி முதல் வருமானவரித் துறை அறிமுகப்படுத்த இருக்கிறது. 

வருமான வரி செலுத்துவோருக்கு எளிமையாகவும், உடனடியாக ‘ரீபண்டு’ வழங்குவதற்கு ஏதுவாகவும் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து கலந்துரையாடல்கள், பதிவேற்றம், நிலுவையில் உள்ள செயல்கள் அனைத்தும், ஒரே பக்கத்தில் தெரியும்படி இந்த இணையதளம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய இணையதள பக்கம் அறிமுகம் மற்றும் பழைய இணைய பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் புதிய பக்கத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக, பழைய இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை செயல்படாது. எனவே கணக்கு தாக்கல்செய்ய விரும்புவோர், இன்று (திங்கட்கிழமை) அல்லது வருகிற 7-ந் தேதிக்குப் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
சென்னையில் உள்ள மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, அண்ணா நகர், கரூர் தி.மு.க. ேவட்பாளர்கள் வீடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகத்தில் வருமான வரித்துறை சார்பில் ேநற்று திடீர் சோதனை நடந்தது.
2. கரூர் சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமானத்துறையினர் சோதனை
கரூர் சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமானத்துறையினர் சோதனை நடத்தினர்.
3. எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா மகன் வீடு, அலுவலகங்களில் சோதனை
எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணைய்யாவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.