மாநில செய்திகள்

வங்கி வேலை நேரம் குறைப்பு: தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு + "||" + Reduction in Banking Hours: Tamil Nadu Bankers Association Announcement

வங்கி வேலை நேரம் குறைப்பு: தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

வங்கி வேலை நேரம் குறைப்பு: தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வில்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வங்கி வேலை நேரம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் தளர்வில்லாத ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 6-ந்தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அனைத்து வங்கிகளுக்கும் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வங்கி கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கி பரிவர்த்தனை நேரம் ஏற்கனவே அறிவித்தது போல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம் போல் மாலை 5 மணி வரை செயல்படும்.

வங்கி கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மாற்று முறையில் பணியில் ஈடுபட வேண்டும். ரொக்க பரிவர்த்தனை, ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு, என்.இ.எப்.டி., எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ்., எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும், நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் போன்ற, சேவைகள் வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புஞ்சைபுளியம்பட்டியில் ஊழியருக்கு கொரோனா: வங்கி மூடப்பட்டது
புஞ்சைபுளியம்பட்டியில் ஊழியருக்கு கொரோனா ஏற்பட்டதால் வங்கி மூடப்பட்டது..
2. சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கி, கடைகளுக்கு அபராதம்
சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கி, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. அதிகாரி- ஊழியர்களுக்கு கொரோனா; வங்கி மூடல்
அதிகாரி-ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வங்கி மூடப்பட்டது.
4. சட்டசபை தேர்தல் எதிரொலி; புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியில் இருந்து 10 மணியாக குறைக்கப்பட்டு உள்ளது.
5. பெரம்பலூாில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூாில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.