உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 17.10 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.32 கோடியை தாண்டியது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,10,17,132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,32,84,389 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35 லட்சத்து 56 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,41,76,214 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,057 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 3,40,43,068,  உயிரிழப்பு - 6,09,544, குணமடைந்தோர் -  2,78,40,884
இந்தியா   - பாதிப்பு - 2,80,46,957,  உயிரிழப்பு - 3,29,127,  குணமடைந்தோர் -  2,56,84,529
பிரேசில்  -  பாதிப்பு - 1,65,15,120,  உயிரிழப்பு - 4,62,092,  குணமடைந்தோர் -  1,49,12,744
பிரான்ஸ் -  பாதிப்பு -  56,66,113,  உயிரிழப்பு -  1,09,402, குணமடைந்தோர் -   53,15,194
துருக்கி  -  பாதிப்பு -  52,42,911,  உயிரிழப்பு -    47,405, குணமடைந்தோர் -   51,05,042

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

ரஷ்யா      - 50,63,442
இங்கிலாந்து - 44,84,056
இத்தாலி    - 42,16,003
அர்ஜெண்டினா- 37,53,609
ஜெர்மனி    - 36,87,715
ஸ்பெயின்   - 36,68,658
கொலம்பியா - 33,83,279
ஈரான்       - 29,02,094
போலந்து    - 28,71,950
மெக்சிக்கோ  - 24,11,503

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
2. சீனாவில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் துவங்கியுள்ளது.
3. புதிதாக 2,190 பேருக்கு கொரோனா; அமீரகத்தில் ஒரே நாளில் 7 பேர் பலி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. கொரோனா, கருப்பு பூஞ்சை மருந்துகளுக்கு வரி குறைக்கப்படுமா? ஜி.எஸ்.டி. கவுன்சில் நாளை முடிவு
கொரோனா, கருப்பு பூஞ்சை மருந்துகளுக்கு வரி குறைப்பு செய்வது பற்றி முடிவு எடுக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை நடக்கிறது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.51 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.86 கோடியாக உயர்ந்துள்ளது.