உலக செய்திகள்

நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல் + "||" + Abduction of 200 students at gunpoint at a Nigerian school

நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில் பள்ளி கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்.
அபுஜா,

நைஜீரியா நாட்டின் நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது.  இஸ்லாமிய கல்வி அளிக்கப்படும் இந்த பள்ளி கூடத்திற்கு, நேற்று மதியம் திடீரென மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர்.

கைகளில் ஆயுதமேந்திய அவர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.  இதனால், மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர்.

இதன்பின்னர் மர்ம நபர்கள், அங்கிருந்த ஏறக்குறைய 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்.  எனினும், நைஜர் நகர போலீஸ் அதிகாரி வாசியு கூறும்பொழுது, பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டனர் என உறுதிப்படுத்த வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றிய போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.  ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மர்ம நபர்கள் பள்ளி கூடத்தில் புகுந்து மாணவர்களை கடத்தி செல்வதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அரசு விடுவித்து கொண்டு வருவதும் அதிகரித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவிலிருந்து வந்த போது போலீசார் சோதனையில் சிக்கினர் 20 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தல்; 2 பேர் கைது
திருத்தணி அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்து இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சாராயத்தை கைப்பற்றினர்.
2. பள்ளி மாணவி கடத்தல்
பள்ளி மாணவி கடத்தப்பட்டார்
3. தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த ரூ.2½ கோடி தங்கம் மற்றும் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது
5. காரில் எரிசாராயம் கடத்தல்
காரில் எரிசாராயம் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.