தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் + "||" + Across the country, 5.22 percent of transgender people are vaccinated against corona

நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. ஆண்களில் 8 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 53 பேரும், பெண்களில் 7 கோடியே 67 லட்சத்து 64 ஆயிரத்து 479 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், 25 ஆயிரத்து 468 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இது, அவர்களது மக்கள்தொகையில் வெறும் 5.22 சதவீதம் ஆகும். 

இதுகுறித்து திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் புஷ்பா மை என்ற பெண்மணி கூறியதாவது:-

தடுப்பூசி போட்டால் மரணம் ஏற்படும் என்று திருநங்கைகளிடையே தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அத்துடன், அவர்களிடம் அரசாங்க ஆவணங்கள் இல்லை. தடுப்பூசி மையத்துக்கு சென்றால் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். 

ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, இணையதளத்தில் முன்பதிவு செய்யும் தொழில்நுட்ப அறிவு இல்லை. இதுபோன்ற காரணங்களால், அவர்கள் தடுப்பூசி போடுவது குறைவாக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை” - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
சான்றிதழ்களில் மரணம் குறித்த பதிவுகள் தெளிவாக இருந்தால் தான் நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
2. நாடு முழுவதும் 11,717 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் மட்டும் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. நாடு முழுவதும் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் - இந்திய ரயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. நாடு முழுவதும் இதுவரை ஐகோர்ட்டு நீதிபதிகள் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் இதுவரை ஐகோர்ட்டு நீதிபதிகள் 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது