தேசிய செய்திகள்

டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி, தன் காதலியை கூட்டி சென்றிருப்பார் - ஆன்டிகுவா பிரதமர் தகவல் + "||" + To Dominica Mikul Choksi would have picked up his girlfriend Antigua Prime Minister Information

டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி, தன் காதலியை கூட்டி சென்றிருப்பார் - ஆன்டிகுவா பிரதமர் தகவல்

டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி, தன் காதலியை கூட்டி சென்றிருப்பார் - ஆன்டிகுவா பிரதமர் தகவல்
டோமினிக்காவுக்கு மெகுல் சோக்சி, தன் காதலியை கூட்டி சென்றிருப்பார் என ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்சி டோமினிக்காவில் பிடிபட்டது குறித்து ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

மெகுல் சோக்சி, விருந்து சாப்பிடுவதற்கோ அல்லது மகிழ்ச்சியாக பொழுது போக்குவதற்கோ தன் காதலியை அழைத்துக் கொண்டு டோமினிக்காவுக்கு படகில் சென்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு அவர் பிடிபட்டுள்ளார். அவர் ஆன்டிகுவா குடியுரிமை பெற்றிருப்பதால், அவரை நாங்கள் நாடு கடத்தி இருக்க முடியாது.

எனவே, வேறு நாட்டுக்கு சென்றதுதான் மெகுல் சோக்சியின் மிகப்பெரிய தவறு. டோமினிக்கா ஐகோர்ட்டு நாடு கடத்த தடையை நீக்கும் பட்சத்தில் அவரை டோமினிக்கா அரசு இந்தியாவுக்கு நாடு கடத்த முடியும். ஏனென்றால் அவர் இந்திய குடிமகன். இவ்வாறு அவர் கூறினார்.