தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 1.52- லட்சம் பேருக்கு தொற்று உறுதி + "||" + India reports 1,52,734 new #COVID19 cases, 2,38,022 discharges & 3,128 deaths in last 24 hrs, as per Health Ministry

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 1.52- லட்சம் பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 1.52- லட்சம் பேருக்கு தொற்று உறுதி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தொடர்ந்து 4-வது நாளாக 2 லட்சத்துக்குள் கீழ் குறைந்துள்ளது. உயிர்ப்பலியும் குறைந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. மே 25-ந் தேதிக்கு பின்னர் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,80,47,534 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,38,022 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,92,342 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 20,26,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 21,31,54,129 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரமாக குறைந்தது
கர்நாடகாவில் இன்று மேலும் 5,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகம்
டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை 38.13 கோடியை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று 17 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா; 2,726 பேர் பலி
இந்தியாவில் கடந்த 75 நாட்களில் குறைந்த அளவாக 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.70-கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17.70-கோடியாக உயர்ந்துள்ளது.