தேசிய செய்திகள்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் + "||" + Kerala Assembly resolution on Lakshadweep slams imposition of saffron agenda

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்

லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில்  தீர்மானம்
லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திருவனந்தபுரம்

லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை அமல்படுத்தியுள்ளார். 

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இத்தீவில் மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பதாகவும், அதேபோல மதுபான கடைகளுக்கு அனுமதியளிப்பதாகவும் அறிவித்தார். இது அத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தவும், குண்டர் சட்டத்தையும் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அத்தீவு மக்கள் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். 

கேரள அரசு, லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபுல் கோடா படேலை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில்  தலையிட வேண்டும் என்று காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.

இந்த நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரபுல் கோடா படேலை மத்திய அரசு நீக்கக் கோரி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். 

"லட்சத்தீவில் பா.ஜ.க தனது  நிகழ்ச்சி நிரலை நிலை நாட்டுவது மற்றும் பெருநிறுவன நலன்களை திணித்து செயல்படுத்துவதே இந்த முயற்சி. லட்சத்தீவு மக்கள், அவர்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்த பின்னர் இது சபையில் நகர்த்தப்பட்ட முதல் தீர்மானமாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 15.5 சதவிகிதமாக உள்ளது.
2. கேரளாவில் மேலும் 12,300 பேருக்கு கொரோனா
கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,06,982 ஆக உள்ளது.
3. கொரோனா பரவல்; கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4. லட்சத்தீவு விவகாரம்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவுகளில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
5. தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த‌து மத்திய நீர்வளத்துறை ஆணையம்
தக்தே புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மராட்டியம் மாநிலங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் குழு விரைந்துள்ளது.