உலக செய்திகள்

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 போலீசார் உயிரிழப்பு; அதிபர் இரங்கல் + "||" + Helicopter crash in Colombia: 5 policemen killed

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 போலீசார் உயிரிழப்பு; அதிபர் இரங்கல்

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து:  5 போலீசார் உயிரிழப்பு; அதிபர் இரங்கல்
கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 5 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.
பொகோட்டா,

கொலம்பியா நாட்டின் பொலிவர் நகருக்கு தெற்கே கேன்டகல்லோ பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது.  அதில் போதை ஒழிப்பு பிரிவு போலீசார் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.  இதில் 5 போலீசார் உயிரிழந்து உள்ளனர்.  இதற்கு இரங்கல் தெரிவித்து அந்நாட்டு அதிபர் இவான் டக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொலம்பியா நாட்டு போலீசில் 5 வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வேதனை தெரிவிக்கின்றேன்.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.  சம்பவம் நடந்த பகுதியை போலீசார் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  ராணுவ வீரர்களும் மீட்பு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.  நம்முடைய நாட்டிற்காக எதனையும் விட்டு கொடுக்கும் நமது வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாம் இருப்போம் என தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் ஹெலிகாப்டர் விபத்து; இந்தியன் லூலூ குழும தலைவர், மனைவி உயிர் தப்பினர்
கேரளாவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் இருந்து இந்தியன் லூலூ குழும தலைவர் மற்றும் அவரது மனைவி உயிர் தப்பினர்.