சினிமா செய்திகள்

விமான விபத்தில் டார்சன் பட நடிகர்- மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிர் இழப்பு + "||" + TARZAN star Joe Lara is among those presumed dead after a private jet crashed into a Tennessee lake

விமான விபத்தில் டார்சன் பட நடிகர்- மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிர் இழப்பு

விமான விபத்தில் டார்சன் பட  நடிகர்- மனைவி  உள்ளிட்ட 7 பேர் உயிர் இழப்பு
சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.
வாஷிங்டன்: 

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது.

 தகவல் அறிந்து விரைந்து வந்த  ரதர்போர்ட் மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் ஒன்று மீட்கப்பட்டது. விமானத்தில் பயணித்த மற்ற 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 

அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையியே மூழ்கிய விமானத்தில் பிரபலமான டார்சன் படத்தில் நடித்த ஜோ லாரா-வும் பயணித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. பலியானவ்சர்களில்  ஜோ லாரா வின் மனைவி க்வென் லாராவும்  ஒருவர்.  மேலும்  ஜெனிபர் ஜே. மார்ட்டின், டேவிட் எல். மார்ட்டின், ஜெசிகா வால்டர்ஸ், ஜொனாதன் வால்டர்ஸ், மற்றும் பிராண்டன் ஹன்னா, இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் ஆவார்கள்.

விமான விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் மூழ்கிய விமானத்தின் பாகங்களையும், எஞ்சிய உடல்களையும் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிர் இழந்ததும், அதேபோல் உட்டா மாகாணத்தில் நடந்த மற்றொரு விமான விபத்தில் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம்
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை பிரதமர் இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். நில அபகரிப்பாளர் தனது தாயைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.
2. சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா
'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.
3. உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் 19 ஆம் தேதி அமெரிக்கா பயணம்
உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.
4. தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்!
தேசிய விருது வென்ற கன்னட நடிகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
5. தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்
வங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.