மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு + "||" + Another nurse dies due to corona infection in Pondicherry

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்தார்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். 

இந்நிலையில், புதுச்சேரி  கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்த 45 வயதான சசி பிரபா என்ற பெண், ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். 

புதுச்சேரியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மேலும் 62,480- பேருக்கு கொரோனா
இந்தியாவில் 73 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் வந்தது
2. 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. கேரளாவில் இன்று 12,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் தற்போது 1,08,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 4,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.