தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு + "||" + In Karnataka, 1,250 people were infected with the black fungus in a single day

கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு, அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.  இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது.  நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் 8,800க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு காணப்படுகிறது.  இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசும் முயற்சி எடுத்து வருகிறது.  இந்த நிலையில், கர்நாடகாவில் ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதில், பெங்களூரு நகர பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த பகுதியில் 521 பேர் நோய் பாதிப்புக்கு ஆளான நிலையில், 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொடர்ந்து தார்வாத் (119 பேர்), கலபுரகி (102 பேர்) ஆகியவை உள்ளன.

அதிக அளவு உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தார்வாத் (8 பேர்) நகர் முதல் இடம் பிடித்து உள்ளது.  தொடர்ந்து ராமநகர் (5 பேர்), கலபுரகி (4 பேர்), தட்சிண கன்னடா (4 பேர்) ஆகியவை உள்ளன.  இதுவரை இந்நோய்க்கு 1193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  18 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  39 பேர் உயிரிழந்து உள்ளனர்.




தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர்: அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு, குடிநீர்; கொரோனா நோயாளி புகார்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் தரமின்றி இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
2. கூத்தாநல்லூர் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கூத்தாநல்லூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
3. தஞ்சை மாவட்டத்தில், ஒரு வாரத்தில் 63 பேர் உயிரிழப்பு: பிணவறை நிரம்பியதால் ஸ்டிரெச்சரில் வெளியே வைக்கப்பட்டிருந்த உடல்கள்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை நிரம்பியதால் பிணவறைக்கு வெளியே ஸ்டிரெச்சரில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. நீடாமங்கலத்தில் சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றும் பணி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நீடாமங்கலத்தில் சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றும் பணி காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,013 பேர் பாதிப்பு 24 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,013 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை