தேசிய செய்திகள்

18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2021 இறுதிக்குள் தடுப்பூசி - மத்திய அரசு உறுதி + "||" + Confident of vaccinating all above 18 by 2021 end: Govt to Supreme Court

18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2021 இறுதிக்குள் தடுப்பூசி - மத்திய அரசு உறுதி

18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2021 இறுதிக்குள் தடுப்பூசி - மத்திய அரசு உறுதி
நாடுமுழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் எனசுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருஇகிறது. ஆனால், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட பலர் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்.

மேலும், இந்திய மக்களுக்கு கொடுக்காமல், வெளிநாடுகளுக்கு இலவசமாக வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு உறுதி கூறி வருகிறது.

இந்தநிலையில் நாட்டின் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை சூப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என சுப்ரீம் கோர்ட்  கேள்வி எழுப்பிய இருந்தது.

இந்த நிலையில் இந்த  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ‘‘இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் மூலம் இரண்டு  வகையான கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 18- வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி செலுத்த இதுவே போதுமானது.

இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்தும் கொரோனா தடுப்பூசி வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே தடுப்பூசி தட்டுப்பாடு ஏதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனவை ஒழிப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. ’’ எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் 18- வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கு நிச்சயமாக எட்டப்படும். இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘உயிரியல் ஆயுதம்’ கருத்து தெரிவித்த : நடிகையும் மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு
‘உயிரியல் ஆயுதம்’ என கருத்து தெரிவித்த சினிமா நடிகையும், மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்
2. தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை.. ! டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்பு?
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா...? முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது
கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
4. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முககவசம் அணிவிக்க கூடாது - மத்திய அரசு
5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
5. தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் ; மாநில அரசுகளுக்கு 74 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசு ஆர்டர்
மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மேலும் 74 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.