மாநில செய்திகள்

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் + "||" + Corona Special Treatment Center in Karur: Launched by First Minister MK Stalin via video

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கரூரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,

கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  

"தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் உள்ள TNPL township-ல் உள்ள சமுதாயக் கூடத்தில், 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது. அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவை ஆகும்.

இந்த சிகிச்சை மையத்திற்குத் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவப் பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி இம்மருத்துவமனைக்குக் கிடைத்திட, சுமார் 1 கோடி ரூபாய் செலவில், தேவையான உபகரணங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், அருகிலுள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜனை சிலிண்டர்களில் இங்கு நிரப்பி வழங்கவும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை கட்டித்தரப்படும்; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி
கரூர் நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை கட்டித்தரப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.
2. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டவுன் பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்; கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் டவுன் பஸ்சில் பெண்கள் இல வசமாக பயணிக்கலாம் என வி.செந்தில்பாலாஜி கூறினார்.
3. கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டி தரப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டி தரப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
4. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வருகை
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் வருகை வருகை புரிகிறார்
5. கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேர் கைது
கரூரில் சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 115 பேரை போலீசார் கைது செய்தனர்.