மாநில செய்திகள்

இன்னும் 2 நாட்களில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் + "||" + Vaccines will be depleted in 2 days - Minister Subramanian

இன்னும் 2 நாட்களில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இன்னும் 2 நாட்களில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் -  அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இன்னும் 2 நாட்களில் கையிருப்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை

கொரோனா மையங்கள் மற்றும் தடுப்புப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டுவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நிருபர்ர்களை சந்தித்தார். அப்போது  அவர் கொரோனா தடுப்புப் பணிகள், படுக்கை வசதிகள், தடுப்பூசிகள் குறித்த விவரங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டியுள்ளது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகிவிட்டது. தற்போது கையிருப்பு இல்லை என்றும், நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இறப்பு எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதாக கூறப்படும் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, இறப்பு எண்ணிக்கையை குறைக்கவேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இல்லை என்று பதிலளித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துமா...?
கொரோனா பாதிப்பால் விந்தணுக்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் பாதிப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
2. 40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை
தமிழ்நாட்டில் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.
3. கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதா? - மத்திய அரசு விளக்கம்
கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும் சீரத்தை வைத்து, வேரோ செல்கள் என்ற உயிருள்ள செல்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
4. கொரோனா 3-ம் அலைக்குத் தயாராகும் டெல்லி: 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி
கொரோனா 3-ம் அலைக்குத் தயாராகும் டெல்லி: 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி ஜூன் 17 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்
5. உகான் நகரில் முககவசம் -சமூக இடைவெளி இன்றி பட்டமளிப்பு விழாவில் 11,000 மாணவர்கள்
உகான் நகரில் முககவசம் -சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட 11,000 மாணவர்கள்