மாநில செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிற்பகல் ஆலோசனை + "||" + Tamil Nadu Health Secretary Radhakrishnan held a consultation with Central Health officials this afternoon

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிற்பகல் ஆலோசனை

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிற்பகல் ஆலோசனை
மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின.  தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன என்றும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியாகியது. 

இந்நிலையில்,  தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.