தேசிய செய்திகள்

தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் + "||" + Stunned by unilateral order wont release chief secretary: Mamata to PM Modi

தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்

தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது  மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம்
கொரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கொல்கத்தா

மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். தாமதமாக வந்ததுடன், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார்.அடுத்த சில மணி நேரத்தில், அம்மாநில தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்தது. இது, பழிவாங்கும் செயல் என்று மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளரை திரும்பப்பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான ஆலன் பந்தோபத்யாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சூழலைக் காரணம் காட்டி தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள  முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாபை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மே.வங்கத்தில் போலீசாரால் சுட்டுக்கொலை
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பஞ்சாப் போதை பொருள் கடத்தல்காரர்கள் இருவர் மேற்குவங்காளத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. மேற்கு வங்காளத்தில் புதிதாக 5,427 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 98 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு
நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. மேற்கு வங்காளத்தை ஆணவத்தின் புயல் இன்னும் சுற்றுகிறது; மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
ஆணவத்தின் புயல் இன்னும் மேற்கு வங்காளத்தில் சுற்றுவதாக கூறி மத்திய அரசை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.
5. மேற்கு வங்காளம்: உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.